
கோலாலம்பூர், ஜூலை 2-
கல்லூரி நாட்கள் வாழ்வின் அழகிய தருணங்கள்.
முகமூடி இல்லாத முகங்கள், வர்ணம் பூசாத நட்பு, காதல்-மோதல், கவலைகளை மறந்து ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த அழகிய நாட்கள் மீண்டும் வராதா என ஏங்காத இதயங்களே இல்லை எனலாம்.
ஜூன் 25, 1995 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பிற்காக நாட்டின் மூத்த பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் கால் பதித்த முன்னாள் மாணவர்களுக்கு வெள்ளி விழாவை கடந்து, இது 30 ஆவது ஆண்டு.
அதனை நினைவுகூறும் வகையில் கடந்த ஜூன் 28 ஆம் நாள், பெட்டாலிங் ஜெயா, மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க கட்டடத்தில் (PAUM Club House) “30 ஆண்டுகள் நட்பு” எனும் கருப்பொருளில் ஒன்றுகூடல் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.

அரசு, தனியார் துறை, வர்த்தகம், சுய தொழில் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 65 நண்பர்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்து தங்களது பரஸ்பர நட்பு, கடந்து வந்த பயணம், இன்னைய தங்களின் குடும்பம் மற்றும் தொழில் குறித்தும் பரிமாரிக் கொண்டனர்.

“30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான்கு வருடம் படிப்பு முடிந்ததும் எல்லோரும் வேலை, குடும்பம் எதிர்காலம்னு ஒவ்வொரு திசையா பயணமாகிட்டாங்க.
ஒரு சிலர் வெளி நாட்டில் வேலை செய்கின்றார்கள், இன்னும் சிலரின் தொடர்பே கிடைக்கவில்லை. அவர்களில் பலரை தொடர்ப்பு கொண்டு, இந்த ஒன்றுகூடல் வழியா பார்த்ததில் எல்லோருக்கும் சந்தோஷம்.

“இப்படி ஓர் ஒன்று கூடல் நிகழ்வு செய்ய மாட்டோமானு, ஏங்கிட்டு இருந்ததா பல நண்பர்கள் சொன்னதை கேட்டும் பொழுது, உண்னையிலே மனசு கனத்தது” என்று விழாவின் ஏற்பாட்டுக் குழு தலைவர் சரவணன் மாரிமுத்து கூறினார்.
இந்நிகழ்வின் வழி, நட்பை புதுப்பிப்பதோடு, புது ‘நெட்வொர்க்கை’ உருவாக்கி அதன்வழி நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் உதவிக் கொள்ளலாம் என்றும் சரவணன் தெரிவித்தார்.

தொழில் நிமித்தமாக ஒவ்வொரு முறையும் குவாலாலும்பூர் வரும்போது, படித்த நண்பர்களை பார்க்க வேண்டும் மனம் ஏங்கும் என, கூச்சிங் சரவாகில் வழக்கறிஞராக பணியாற்றும் ரத்னா தேவி பெருமாள் கூறினார்.
“நான் சரவாங்கியன், ஒரு வழக்கரிஞர். இந்த நிகழ்சிக்காக கூச்சிங்கில் இருந்து வந்தேன்.

எல்லோரையும் பார்த்து பேசியதில் ரொம்ப சந்தோஷம், இந்த நட்பு தொடரவேண்டும், இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியோட முடிஞ்சிட கூடாது”, என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
பினாங்கில் மருத்துவ ஆய்வக அறிவியலாளராக பணியாற்றும் நா. கலைச்செல்வி இவ்வொன்று கூடல், வாழ்வில் மறக்க முடியாத இனிமையான தருணம் என வர்ணித்தார்.
“பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதுகூட பலரை பார்த்ததில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறை, தங்கும் விடுதினு இருப்பாங்க. எல்லோரையும் ஒரு நேரத்துல, ஒரே இடத்துல பாக்க முடியாது.
“பல சமயம் திரைப்படங்களை படங்களை பார்க்கும் போதுகூட, இதுபோன்ற ஒன்றுகூடல் ஏற்பாடு செய்ய மாட்டாங்களானு மனசு ஏங்கும்?
மீண்டும் ஒருமுறை எல்லா நண்பர்களை பார்க்க மாட்டோமா, சாத்தியமா தோன்றும். அது உண்மையிலே இப்போது நிஜமாகியுள்ளது.
இந்த நட்பு வட்டம் தொடரவேண்டும்”, என்றும் கலைச்செல்வி கேட்டுக் கொண்டார்.
பல்கலைக்கழகம் கல்வியோடு பல கலைகளை கற்று, வாழ்வில் முன்னேற வழிவகுத்ததாக தொழில் அதிபரும், மலேசிய மனவளக்கலை மன்ற ஒருங்கிணைப்பாளருமான சிரம்பானை சேர்ந்த ஆறுமுகம் பாலகிருஷ்ணன் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
‘பல்கலைக்கழகம் கல்வியோடு பல கலைகளை கற்று தந்துள்ளது. சுய முன்னேற்றம், குடும்ப மேம்பாட்டோடு நின்று விடாமல், சமூக வளர்ச்சிக்கும் முடிந்த அளவு பங்காற்றி வருகிறேன்.
நான்கு வருடம் பல்கலைக்கழக வாழ்க்கை நிறைய கற்றுத்தந்துள்ளது” என்று தமது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.
இதனிடையே, சிங்கப்பூரில் மூத்த பொரியளாலராக பணியாற்றி வரும் குணாளன் இலட்சுமணன், கடந்த 1999 ஆண்டு பட்டம் பெற்ற பின்பு நண்பர்களை முதன் முறையாக சந்திப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“முதல் முறையே 30 வருடத்துக்கு பிறகு பல நண்பர்களை ஒரே இடத்தில் சந்திக்ககூடிய அர்புதமான வாய்ப்பு கிடைத்தது.
“முக்கியமாக மிக நெருக்கமான 22 நண்பர்களை பார்த்து, அவர்களுடைய தொழில் வளர்ச்சி, குடும்பம், பிள்ளைகளின் கல்வி, கடந்து வந்த வாழ்க்கை பயணம் என பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டோம்.
வாழ்க்கையில மறக்க முடியாத நிகழ்வா அமைந்தது, இந்த ஒன்று கூடல்”, என்று குணாளன் மேலும் விவரித்தார்.
இதே போன்ற ஒன்று கூடல் இரண்டு வருத்திற்கு ஒரு முறை அல்லது, இன்னும் ஐந்து வருடம் கழித்து மீண்டும் நடத்தவேண்டும் என்றும் பல நண்பர்கள் ஏற்பாட்டுக் குழுவை கேட்டுக்கொண்டனர்.
இந்த ஒன்று கூடல் நிகழ்வில் இயற்கை எய்திய நண்பர்களின் நினைவாக சிறப்பு ஆவணப் படமும் இடம் பெற்றது.

