

பிறை, ஜூலை 1-
பினாங்கு இந்தியர் கால்பந்து கிளப் ஆதரவில் பிறை எம்பிபிகே ஏற்பாட்டில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற கே.ரகு கிண்ண கால்பந்து போட்டியில் ரோயல் ஸ்குவாட் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
கே.ரகு கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் ரோயல் ஸ்குவாட் அணியும் ரெட் டிராகன் அணியும் மோதின. இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்ததால் ஐந்து பெனால்டி கிக் வழங்கப்பட்டது.

இறுதியில் ரோயல் ஸ்குவாட் 4-3 என்ற பெனால்டி கிக் மூலம் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து கிளப் பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் கே.ரகு கிண்ண கால்பந்து போட்டியையும் நடத்தி வருகிறது.
மகளிர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் இம்முறை எட்டு அணிகள் பங்கேற்றன.

போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் மற்றும் பிறை எம்பிபிகே தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டி இம்முறை புதிய சகாப்தம் படைத்துள்ளது.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ, பிறை சட்டமன்ற மக்கள் சேவை மையத்தின் இயக்குனர் கிருஷ்ணன், பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் பிரேம்குமார் மற்றும் பிறை யுனைடெட் எஃப் சி நிர்வாகி நவின் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
பிறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறந்த முறையில் சேவையை வழங்கி வரும் டத்தோஸ்ரீ ராஜூ வழங்கி வரும் ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.
இந்த போட்டி வெற்றி பெற ஆதரவு கரம் நீட்டிய அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

