நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை அரசாங்கம் செவி சாய்க்கும்!

நாட்டில் உள்ள தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் தேவைகளை நிறைவு செய்ய அரசாங்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது அவைகளின் மேம்பாட்டில் ஒரு போதும் கைவிடபடமாட்டாது என்று துணை கல்வி அமைச்சர் வாங் கா வோ உறுதி அளித்தார்.

பேரா , சுங்கை சிப்புட்டில் உள்ள டோவன் பி தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு வருகை அளித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு பேசினார்.

அந்த வகையில் அண்மையில் சுப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் இரு புதிய பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டதை நினைவுக் கூர்ந்தார். டோவன் பி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் நில நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது.

அந்த இடத்தில புதிய பள்ளியை எழிப்ப முந்தைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமது கவனத்திற்கு.கொண்டு வரப்பட்டது.அது தொடர்பாக தமது அமைச்சிடம் விவரங்கள் கேட்டறிய உள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்..

மேலும் பேசிய அவர் , இப்பள்ளியின் வளர்ச்சிக்கு 50 ஆயிரம் ரிங்கைட்டை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

110 மாணவர்களை கொண்ட இப்பள்ளிக் கூடத்தில் இட வசதியில்லாத குறையை போக்க புதிய பள்ளிக் கூடம் அல்ல கூடுதல் வகுப்புறை தேவைகளை துணை அமைச்சர் வால் கா வோவின் கவனத்திற்கு முன் வைத்துள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியை ராஜம்மாள் வீராசாமி கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles