புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு அவசியம் – சிவகுமார் நினைவுறுத்து!

பத்துகாஜா,ஜூலை02: பொது சுகாதாரம் உட்பட சுய ஆரோக்கியத்தில் மலேசியர்கள் விழிப்போடும் விவேகமாகவும் இருத்தல் வேண்டும்.

அதேவேளையில்,புற்றுநோய் விவகாரத்திலும் நாம் கூடுதல் விழிப்போடும் இருக்க வேண்டியது அவசியமாவதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் நினைவுறுத்தினார்.

குறிப்பாக பெண்கள் மார்பக புற்றுநோய் மற்றும் பெண்ணுறுப்பு புற்றுநோய் விவகாரங்களில் விழிப்போடும் கூடுதல் கவனத்தோடும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

LPPKN மகளிர் சுகாதார கிளினிக் மற்றும் புக்கிட் மேரா கிராம மேம்பாட்டு நிர்வாகமும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமினை தொடக்கி வைத்து பேசுகையில் சிவகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிவகுமாரின் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வேளையில் மெமோகிரம்,மார்பக புற்றுநோய் பரிசோதனை,இரத்த அழுத்தம் பரிசோதனை,பெண்ணுறுப்பு புற்றுநோய் பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகளை வருகையாளர்கள் பெற்று கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய சிவகுமார் நோய் வருவதை தடுக்க குறைந்தது வருடம் ஒருமுறை மருத்துவ பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை கூறியதோடு இதுபோன்ற மருத்துவ முகாமினை பத்துகாஜா நாடாளுமன்றத்தில் விரிவடைய செய்யவிருப்பதாகவும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles