பெந்தோங் ம இகா தொகுதி ஆண்டு கூட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது!

பெந்தோங், ஜூலை 9-
பகாங் மாநிலத்தில் மிகவும் துடிப்புடன் இயக்கும் பெந்தோங் ம இகா தொகுதி கூட்டம் கடந்த வாரம் இறுதியில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பெந்தோங் தொகுதி தலைவர் டாக்டர் ஜெயந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

நெகிரி செம்பிலான் மாநில ம இகா தலைவர் சுப்பிரமணியம் அவர்கள் ம இகா தலைமையகத்தின் சார்பில் இந்த கூட்டத்தை வழிநடத்தினார். பகாங் சபாய் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆறுமுகம் கலந்து சிறப்பித்தார்.

பெந்தோங் தொகுதி மக்களுக்கு குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு நிறைவான சேவைகளை வழங்கி வருகிறோம் என்று டாக்டர் ஜெயந்திரன் தமது உரையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles