பெட்டாலிங் மாவட்ட கால்பந்து கால்பந்து போட்டியில் தம்புசாமி, காஜாங் தமிழ்ப்பள்ளிகள் சாம்பியன்!

சுங்கை பூலோ: ஜூலை 15-

பெட்டாலிங் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் கோலாலம்பூர் தம்புசாமி மற்றும் சிலாங்கூர் காஜாங் தமிழ்ப்பள்ளிகள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

கடந்த சனிக்கிழமை சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ மைதானத்தில் நடைபெற்றஇந்த கால்பந்து போட்டியில் 100 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின.

இதில் ஆண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்திற்கு தம்புசாமி தமிழ்ப் பள்ளியும் நோர்ட் ஹாம்பர்க் தமிழ்ப் பள்ளியும் தேர்வு பெற்றன.

இதில் தம்புசாமி தமிழ்ப்பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நமச்சிவாயம் கிண்ணத்தையும் ரொக்கத்தையும் தட்டிச் சென்றது

இரண்டாவது இடத்தைப் பிடித்த நோர்ட் ஹாம்பர்க் தமிழ்ப்பள்ளிக்கு கிண்ணமும் வெகுமதியும் வழங்கப்பட்டது.

மூன்றாவது இடத்தை காஜாங் தமிழ்ப் பள்ளி, நான்காவது இடத்தை காப்பார் மெத்தடிஸ்ட் தமிழ்ப் பள்ளி பிடித்தன.

பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்திற்கு காஜாங் மற்றும் ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தேர்வு பெற்றன.பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில் பெனால்டி கிக் மூலம் வெற்றி பெற்ற காஜாங் தமிழ்ப்பள்ளி ரவிந்திரன் கிண்ணத்தையும் ரொக்கத்தையும் வென்றது.

இரண்டாவது இடத்தைப் பிடித்த ஹைலண்ட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் 3ஆவது இடத்தை துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும் 4 ஆவது இடத்தை பத்து அராங் தமிழ்ப்பள்ளியும் பிடித்தன.

எப்ஏஎஸ் உதவித் தலைவர் டத்தோ சுகுமாறன் ,மீபா தலைவர் அன்பானந்தன், பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை, துணை தலைவர் குணா, கென்னத் கண்ணா, செயலாளர் குணா, பொருளாளர் இராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles