மாமன்னரின் கூடுதல் உத்தரவை அமல்படுத்துவதில் எதற்கு தாமதம்? டத்தோஸ்ரீ தனேந்திரன் கேள்வி

கோலாலம்பூர் ஜூலை 16-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு
மாட்சிமை தங்கிய மாமன்னர் வழங்கிய கூடுதல் உத்தரவை அமல்படுத்துவதில் எதற்கு தாமதம் என்று மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் கேள்வியை முன் வைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்கும் உத்தரவாக இந்த கூடுதல் உத்தரவு விளங்குகிறது.

அரசியலமைப்பின் அடிப்படையில் மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால், இந்தப் பிரச்சினையை அரசியல் விவாதமாக மாற்றக்கூடாது.

ஆனால் மாமன்னரின் ஒவ்வொரு உத்தரவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்

கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 38இன் கீழ் நாட்டின் ஜனநாயகத்தின் மையமாக மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரத்தை வழங்குகிறது.

எனவே மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு உத்தரவையும், தாமதம், அரசியல் தலையீடு அல்லது நிர்வாக சூழ்ச்சி இல்லாமல் மதித்து செயல்படுத்த வேண்டும்.

மேலும் இந்த கூடுதல் உத்தரவை செயல்படுத்துவதில் ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதில் அதிகாரிகள் குறிப்பாக சட்டத்துறை தலைவர் பொறுப்பு, பணி குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

அரசாங்கத்தின் முக்கிய சட்ட ஆலோசகராக விளங்கும் சட்டத்துறை தலைவர் முன்கூட்டியே செயல்பட்டு உத்தரவை செயல்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். அதை தாமதப்படுத்தக்கூடாது என்றார்.

இந்த வழக்கு சிவில் வழக்கு, குற்றவியல் வழக்கு அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles