தனது பிறந்தநாளில்
பட்டதாரி பிள்ளைகளை பாராட்டி சிறப்பித்த
மண்ணின் மைந்தர்
மனோ பரமசிவம்

சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவையின் உதவித் தலைவராக இருக்கும் யாங் பெர்பாஹியா டாக்டர் மனோ பரமசிவம் கடந்த வெள்ளிக்கிழமை தமது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

இவரின் தந்தை பரமசிவம் மக்கள் தொண்டன் டாக்டர் வி. டேவிட்டின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

புக்கிட் கியாரா தோட்டத்தில் பிறந்து வளர்ந்து இன்று சமுதாயத்திற்கு சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியாக மனோ பரமசிவம் விளங்கிகிறார்.

புக்கிட் கியாரா வட்டாரத்தில் உள்ள இந்தியர்களுக்கும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் கால்பந்து கிளப்புகளுக்கும் இவர் பலவகைகளில் உதவி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் தமது பிறந்த நாளின் போது தனது சகோதரர், சகோதரிகள், மைத்துனர் ஆகியோரின் எட்டு பட்டதாரிகளுக்கு சிறப்பு செய்து வெகுமதிகளை வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தினேஷ்குமார் மனோகரன் ( வர்த்தகத் துறை), திலிப் குமார் மனோகரன் (வழக்கறிஞர் லண்டன்), சுரேஷ்குமார் ரவிச்சந்திரன் ( கட்டட வடிவமைப்பாளர்), பவித்ரா ரவிந்திரன் (மருத்துவம்), பிரவினா சிவகுமார் (கணக்கியல் துறை), தனுஷா சிவகுமார் (மனித வளம்), ஜெரமி மார்க்ஸ் ( வழக்கறிஞர் லண்டன்), இமெல்டா சந்திரசேகரன் ( வழக்கறிஞர் லண்டன்) ஆகியோர் இந்த விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.

ஒரு காலத்தில் ஒரு பட்டதாரியை உருவாக்க நாங்கள் பெரும் சிரமப்பட்டோம்.

ஆனால் இன்று எங்கள் குடும்பத்தில் எட்டு பட்டதாரிகள் என்று நினைக்கும் போது இந்த ஏழை தோட்டப் பாட்டாளியின் மகனான என் உள்ளம் பூரிக்கிறது என்று யாங் பெர்பாஹியா டாக்டர் மனோ பரமசிவம் பெருமையுடன் தெரிவித்தார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles