வெளிநாட்டு தொழிலாளர்கள் வருகையால்
மலேசியர்களின்
வேலை வாய்ப்பு பாதிக்காது!
அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

இந்திய உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த ஐந்து லட்சம் தொழிலாளர்களை தருவிக்கு மலேசியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இவர்களின் வருகையால் மலேசியர்களின் வேலை வாய்ப்பு பாதிக்காது என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்.

கடினமான துறைகளில் இவர்கள் வேலை செய்ய வருகிறார்கள்.

குறிப்பாக தோட்டம், விவசாயம், கட்டுமானத் துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்க இவர்கள் வருகிறார்கள்.

நாட்டில் ஏற்பட்ட நோய்த் தொற்றின் போது ஏழு லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

பல துறைகளில் காணப்படும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்க உடனடியாக இவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியுள்ளது.

தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருக்கும் இந்தியத் தொழில் துறைகளுக்கு தொழிலாளர்கள் தருவிக்கப்படுவார்கள் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles