தவில்  நாதஸ்வர பெருந் திருவிழா 2025; 6 கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது!

கோலாலம்பூர், ஜூலை 20

தென்னிந்திய பாரம்பரிய இசையின் பெருமையை பறைசாற்றும் வகையில் “மலேசிய நாதஸ்வர தவில்  நுண்கலை அகாடமி ” ஏற்பாட்டில் மலேசியாவில் முதன்முறையாக நாதஸ்வரம், தவில் பெருந் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது.

செந்துல் Galaxy Banquet மண்டபத்தில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் சென்னை தமிழிசை சங்கத்தின் தலைவர் திருநாச்சியப்பன் ,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை கலாச்சார மையத்தின் இயக்குனர் திருமதி விஜயலட்சுமி சுந்தர்ராஜ் சிறப்பு வருகையோடு இயக்கத்தின் அரங்காவலருமான திரு குணசீலன் அனைவரும் கலந்து கொண்டனர்.

இத்துறையில்  அனுபவம் பெற்ற 6 கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு மேலும்  பெருமமை சேர்த்துள்ளது.

நிகழ்ச்சியில் மலேசிய நாதஸ்வர தவில்  நுண்கலை அகாடமி சார்பாக மக்கள் கலைஞர் கவிமாறனுக்கு சிறப்பு செய்து கௌரவித்தனர்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு  உலகளாவிய அளவில் இவ்விழாவை நடத்த ஏற்பாடு  செய்யப்படும்.

மேலும் நாதஸ்வரம் தமிழில் கலையில் வளர்ந்து வரக்கூடிய கலைஞர்களுக்கு  நிறைய பயிற்சிகளையும் சிறப்புகளையும் செய்ய இயக்கம் பல திட்டங்களை வகுத்து வருவதாக மலேசிய நாதஸ்வர தவில்  நுண்கலை அகாடமி தலைவர்  கணேசன் கூறினார்.

அதே நேரத்தில் உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles