

தோட்டப் புறத்தில் உள்ள ஆலயங்களை தொடந்து நிலை நிறுத்துவதை தோட்டத்தின் முன்னாள் பணியாளர்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்
அதேசமயம் ஆலயங்கள் அமைந்திருக்கும் நிலப்பரப்பை ஆலய நிர்வாகம் அந்த நிலம் ஆலயத்திற்கு சொந்தமானதாக இருப்பதற்கான வழிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
பெரும்பாலும் இன்று பிரச்சனைக்கு உள்ளாகும் ஆலயங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் தோட்டப்புறங்களில் இருந்து ஆலயங்கள் என்பது வேதனை அளிக்கிறது.
என்று பாகான் செராய் ஜின் செங் தோட்ட முத்து மாரியம்மன் ஆலய நன்னிராட்டு பெருவிழாவிற்கு வருகை அளித்த பினாங்கு, பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் வலியுறுத்தினார்.
பாகான் செராய் ஜின் செங் தோட்ட மாரியம்மன் ஆலயத்தில் நன்னீராட்டுப் பெருவிழா 1,000 மேற்பட்டோர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 122 ஆண்டு பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் ஆலய நன்னிராட்டு பெருவிழாவின் தோட்டத்தில் வாழ்ந்த முன்னாள் தோட்ட பணியாளர்கள் உட்பட இன்னாள் தோட்ட குடியிருப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
பாகான் செராய் நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 122 ஆண்டுகள் பழமையான ஜின் செங் தோட்ட அருள்மிகு மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தில், நன்னீராட்டுப் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 9:40 மணிக்கு தொடங்கி 10:40 மணி வரை நடைபெற்ற இந்த ஆன்மிக விழா, தோட்டத்தைச் சேர்ந்த மக்கள், முன்னாள் குடியிருப்பாளர்கள், பக்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பங்கேற்புடன் பிரமாண்டமாக நன்னீராட்டுப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக, பினாங்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குமரேசன் ஆறுமுகம் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
விழாவினை வெற்றிகரமாக நடத்த ஆலய நிர்வாகிகள் மிகச் சிறப்பாக திருப் பணியாற்றினர்.
ஆலயப் நிர்வாக இயக்குநர்களான
தலைவர்: திரு. தங்கராஜு அய்யாவு
துணைத் தலைவர்: திரு. கிருஷ்ணய்யா
செயலாளர், திரு. முருகேசன் வீரய்யா
பொருளாளர்: திரு. நந்தா மதியழகன்
மேலும், நன்னீராட்டுப் பெருவிழா ஒருங்கிணைப்பளரான
திரு. குமரேசன் சங்கரபாணி
திரு. சிவாகரன் கிருஷ்ணன்
எழுச்சியுடன் பணியாற்றினர்.
பக்தர்கள் கலந்துகொண்டு ஆராதனை நிகழ்வுகளில் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்கள் செலுத்தியதுடன், ஆலய வளாகம் முழுவதும் பக்தி சார்ந்த ஆனந்தமய சூழ்நிலை நிலவியது.

