நன்றி பிரதமர் அவர்களே! அனைத்து இனங்களும் பாதுகாக்கப்படுகின்றன – டத்தோஸ்ரீ இரமணன் பாராட்டு

புத்ரா ஜெயா, ஜூலை 23-
நாட்டு மக்களின் நலனுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இன்று ஆறு
அம்சங்கள் அடங்கிய திட்டங்களை அறிவித்தார்.

வரும் செப்டம்பர் முதல் ரோன் 96 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 1வெள்ளி 99 காசாக விற்பனைக்கு வரும்.

மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு சாரா திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தலா 100 வெள்ளி.

டோல் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் ரஹ்மா மடானி விற்பனை திட்டத்திற்கு 600 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு, இனம், மதம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் மக்களின் தலைவிதியைப் பாதுகாப்பதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்பதற்கான தெளிவான சான்றாகும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். இரமணன் கூறினார்.

பண உதவி, இலக்கு மானியங்கள், வாழ்க்கைச் செலவுக் குறைப்பு முயற்சிகள் மற்றும் சாதனை அளவிலான முதலீடுகள் உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவை இந்திய சமூகம் உட்பட அனைத்து இன் மக்களின் தேவைகளுக்கான அரசாங்கத்தின் அக்கறையை பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles