
சுங்கைபட்டாணி, ஜூலை 23-
பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டும் வரும் பத்து டூவா மாரியம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர விழாவினை கொண்டாடப்படுவதற்கு கோலமூடா மாவட்ட போலீசார் அனுமதி தந்துள்ளனர்.
பதிவு இலாகா சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கியிருக்கும் இந்த ஆலயப் பிரச்சனை ,இந்த ஆண்டு வழக்கம்போல் இங்கு கொண்டாடப்படும் ஆடிப்பூர திருவிழா தடைப்பட்டு விடுமோ என்ற கவலை இங்குள்ள பக்தர்களுக்கு மேலோங்கி இருந்தது.
இது குறித்து இவ்வட்டாரத்தைச் சேர்ந்த ஜீவரத்தனம் பொன்னுசாமி தலைமையில் சேர்ந்த தரப்பினர் கோலமூடா மாவட்டா போலீசாரை சந்தித்து வழக்கம்போல் நடைபெறும் திருவிழாவிற்கு அனுமதி கோரியுள்ளனர்.
28.7..2025 திகதி திங்கட்கிழமை கொண்டாடப்பட விருக்கும் இத்திருவிழாவிற்கு அனுமதியினை வழங்கிய போலீசார் எந்த ஆராவாரம் இல்லாமல் ஆலய வளாகத்தின் மட்டும் இவ்விழாவினை கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதாக இந்த விழாவினை தமது தலைமையில் பொறுப்பேற்று நடத்தும் மா.அண்ணாதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

