எங்களுக்கு வெறும் 200 அந்நியத் தொழிலாளர்கள்; 500 தொழிலாளர்கள் யாருக்கு கொடுத்தார்கள்? டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேள்வி

காளிதாஸ் சுப்ரமணியம்

சுபாங், ஜூலை 27-
பாரம்பரிய இந்திய தொழில் துறைகளுக்கு வேவை செய்ய அந்நியத் தொழிலாளர்களை 14 ஆண்டுகளாக நாங்கள் போராடி வெற்றி பெற்றோம்.

எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 7,500 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கினார்.

அப்போது மனிதவள அமைச்சராக இருந்த சிவகுமார் எங்களுக்கு உதவி புரிந்தார்.

அந்த வகையில் மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்க உறுப்பினர்களுக்கு 2,500 அந்நியத் தொழிலாளர்கள் ஒதுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எங்களுக்கு வெறும் 200 அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

மேலும் 500 அந்நியத் தொழிலாளர்களை
யாருக்கு வழங்கினார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்று டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் குறிப்பிட்டார்.

14 ஆண்டுகால போராட்டங்களுக்கு பிறகு அரசாங்கம் எங்கள் துறைக்கு 2500 அந்நியத் தொழிலாளர்கள் அனுமதியை வழங்கினர்.

இந்த கோட்டாவின் கீழ் கிட்டத்தட்ட 700 அந்நியத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் வந்துள்ளதாக பதிவுகள் காட்டுகின்றன.

ஆனால் சங்கத்திற்கு தெரிந்தவரை கிட்டத்தட்ட 200 அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே இங்கு வேலை செய்ய வந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.

அப்படி என்றால் எஞ்சிய 500 அந்நியத் தொழிலாளர்களை யார் நாட்டிற்குள் கொண்டு வந்தது என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.

அவர்கள் எங்கு வேலை செய்கின்றனர் என்பது குறித்து தகவல்கள் எ எங்களுக்கு தெரியாது.

இந்த 2,500 அந்நியத் தொழிலாளர்கள் என்பது எங்களின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

ஆனால் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இதன் வாயிலாக பயனடையவில்லை என்பது உண்மை. இது பெரும் ஏமாற்றமாக உள்ளது என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் ஆண்டு கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

ஆகவே அரசாங்கம் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே டிக் டாக் உட்பட சமூக ஊடகங்களின் வாயிலாக தற்போது நகை வணிகங்கள பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பல மோசடி சம்பவங்கள் நடந்து வருவதாக புகார்கள் கிடைத்துள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles