அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் பாராபட்சம்; மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கம் வேதனை!

காளிதாஸ் சுப்ரமணியம்

செலயாங்: ஜூலை 28-
குத்தகை தொழில் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசாங்கம் பாராபட்சம் பார்க்க கூடாது என்று
மலேசியா இந்திய குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற குத்தகை யார் சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் பல முக்கியமான விவகாரங்கள் குறித்து பேசப்பட்டன.

குறிப்பாக குத்தகை துறையில் நிலவி வரும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை முன் வைத்தனர்.

.
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை என்பது நீண்ட கால சர்ச்சையாகவே இருந்து வருகிறது.
இதற்கு தீர்வு வேண்டும் என அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

ஆனால் எங்களுக்கு எந்த ஒரு தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.

அரசாங்க குத்தகை வைத்திருந்தால் அவர்களுக்கு அந்நிய தொழிலாளர்கள் வழங்கப்படுகிறது.

இதுபோன்ற குத்தகை இல்லாதவர்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் வழங்கப்படுவதில்லை.

இது குத்தகை துறையில் உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது.
குறிப்பாக அரசாங்கம் ஏன் இந்த விவகாரத்தில் பாராபட்சம் பார்க்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles