உங்கள் வாக்குறுதிகள் காற்றில் பறக்கிறது? மஇகாவை குறைக் கூற தகுதியில்லை! அர்விந்த் சாடல்

கோலாலம்பூர்: ஜூலை 29-
பொதுத்தேர்தலில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கிறது. ஜசெக தலைவர்கள் மஇகாவை குறைக் கூறுவதற்கு தகுதியில்லாதவர்கள் என்று
மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் இனியும் புலம்ப வேண்டாம். ஒன்றுப்பட்டு செயல்படுங்கள்.

இல்லையென்றால் வெளியேறுங்கள் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி அறிக்கையை அவர் இன்று சாடினார்.

இப்படி மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்வதற்கு முன்பு அவர் முதலில் உங்கள் முதுகை கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

தேர்தல் காலங்களில் ஜசெக பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது. அந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்கிறது .

பிடிபிடிஎன் கடன் ரத்து, பெட்ரோல் விலையை குறைப்போம், 1 மில்லியன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உட்பட பல வாக்குறுதிகளை ஜசெக தலைவர்கள் கொடுத்தனர். தமிழ்ப்பள்ளி மேம்பாடு, மெட்ரிகுலேசனில் சமமான கல்வி வாய்ப்பு என்றுக் கூட கூறினர்.

ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை.

எங்களை குறை கூறுவதை நிறுத்தி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற போராடுங்கள் என்று அர்விந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles