
கம்பார், ஜூலை 30-
கடந்த 26/7/2025 அன்று கம்பார் ராக் கான் மூடா வளாகத்தில் நடைபெற்ற ரஹ்மா விற்பனை நிகழ்ச்சி, அனைத்து மட்ட உள்ளூர்வாசிகளிடமிருந்தும், குறிப்பாக மாலிம் நவார் சட்டமன்ற குடியிருப்பாளர்களிடமிருந்தும் அசாதாரண வரவேற்பைப் பெற்றதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் பவானி தெரிவித்தார்.

இந்த திட்டம் வெற்றிகரமாக நடத்த துணை புரிந்த பேராக் மாநில விவசாய தோட்ட தொழில் துறை மற்றும் உணவு உற்பத்தி மேம்பாட்டு நடவடிக்கை குழு தலைவர் டத்தோ ஹாஜி முகமட் சூல்கிப்லி அவர்களுக்கு பவானி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் குறைந்த வருமானம் கொண்ட பி -40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு அவர் உணவு கூடைகளை அன்பளிப்பு செய்தார்.
மாலிம் நாவர் வட்டாரத்தில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கும் தளவாடங்கள் வழங்கி அவர் உதவிக் கரம் நீட்டினார்.

ஆயர் ஈத்தாம் தேசிய பள்ளிக்கு 3,000 வெள்ளி மானியம் வழங்கினார்.
ரஹ்மா மடானி விற்பனை நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் குறைந்த விலையில் தங்களுக்கு போதுமான உணவு பொருட்களை வாங்கி சென்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்

