100 ரிங்கிட் சாரா திட்டத்தின் கீழ் அடையாள அட்டையை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம்!

கோலாலம்பூர், ஜூலை 31 – கடந்த வாரம் பிரதமர் அறிவித்த 100 ரிங்கிட் அடிப்படை ரஹ்மா நன்கொடை (SARA) திட்டத்தின் மூலம் ஆகஸ்டு 31ஆம் தேதி முதல் மக்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

ஒரு முறைக்கான இந்த உதவித் தொகை தானாகவே பெறுநரின் அடையாள அட்டையில் வரவு வைக்கப்படும். இந்தஉதவியின் மூலம் அவர்கள் 90,000க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களை ரொக்கமின்றி வாங்க முடியும்.

மேலும், 22 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்திற்காக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக வருமான நிலை அல்லது குடும்ப வருமானத்தின் வகையைப் பொருட்படுத்தாமல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த உதவி வழங்கப்படுகிறது.

மைடின், லோட்டஸ், எக்கோன் சேவ் மற்றும் 99 ஸ்பீட்மார்ட் போன்ற முக்கிய பல்பொருள் விற்பனை மையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் உட்பட 4,100க்கும் மேற்பட்ட கடைகளில் டிசம்பர் 31 வரை பொதுமக்கள் அடிப்படை பொருட்களை வாங்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles