
கோலாலம்பூர், ஆக 1-
பிரபல அரசியல்வாதி மற்றும் சமூக சேவையாளருமான எஸ்.பக்தவச்சலம் மீண்டும் லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் தொண்டன் டாக்டர் வி.டேவிட் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்த பக்தவச்சலம், மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்திலும் மூத்த தலைவராக இருந்தார்.
1998 ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட கெஅடிலான் கட்சியில் இணைந்த பக்தவச்சலம் பின்னர் லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதியில் உதவித் தலைவரானார்.
2008 ஆம் ஆண்டில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நூருல் இஸா அன்வார் வெற்றிக்கு பக்தவச்சலம் கடுமையாக போராடினார்.
பின்னர் 2013 இல் மீண்டும் நூருல் இஸா மற்றும் 2018,2022 பாமி பட்சில் வெற்றிக்கும் பக்தவச்சலம் பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஐந்தாவது முறையாக பக்தவச்சலம் லெம்பா பந்தாய் கெஅடிலான் உதவித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் .
லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவராக தன்னை மீண்டும் நியமனம் செய்த தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பக்தவச்சலம் தெரிவித்தார்

