
கோலாலம்பூர்,ஆக 1-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் எஸ் பக்தவச்சலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி தலைநகரில்
Gabungan Teksi Semalaysia சங்கத்தின் தலைவர் Kamarudin Hussain ஆதரவு பேரணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிலைத்திருக்க வேண்டும்.
அவருக்கு ஆதரவு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணி வெற்றி பெற செய்யுங்கள் என்று பக்தவச்சலம் வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமராக பதவி ஏற்ற பிறகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டை சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறார்.
அவர் ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அதன் பின்னர் அவரின் ஆட்சியை மதிப்பிட வேண்டும்.
கடந்த வாரம் தலைநகரில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணி அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்று அவர் சாடினார்.

