


ஈப்போ, ஆக.5: பேராக் மாநில அரசாங்கத்தின் பேராதரவுடன் பேரா மாநில இந்தியர் காற்பந்து சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற காற்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது. இரண்டாவது இடத்தை தைப்பிங்
சின் வா தமிழ்ப்பள்ளி பிடித்தது.
மூன்றாவதாக பத்தாக் ரப்பிட் தமிழ்ப்பள்ளியும், நான்காவதாக வால் புரோக் தமிழ்ப்பள்ளியும் வென்றன.
இதனிடையே பெண்கள் பிரிவில் ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி வெற்றிப் பெற்றதுடன் இரண்டாவது இடத்தை ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கம் சுழல் கிண்ணம் மற்றும பதக்கமும் வழங்கப்பட்டது.
கடந்த 17 ஆண்டு காலமாக இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி இங்குள்ள ஈப்போ பாடாங் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 61 குழுக்கள் கலந்துக்கொண்டதாக சிவநேசன் சுழல் கிண்ணம் என்ற பெயரில் இப்போட்டி நடத்தப்பட்டதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் , பேரா மாநில இந்தியர் காற்பந்து சங்கத் தலைவருமான டத்தோ அமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 38 குழுக்களும் , பெண்கள் பிரிவில் 23 குழுக்களும் கலத்துக்கொண்டனர்.மொத்தம் 915 மாணவர்கள் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மாணவர்கள் கல்வியில் மட்டும் அல்ல விளையாட்டுத் துறையில் குறிப்பாக காற்பந்து துறையில் வளர்ச்சிக்கான உந்துதல் ஏற்படுத்த இந்தப் போட்டியை ஆண்டு தோறும் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இப்போட்டியில் சிறந்த விளையாட்டாளர்கள் அடையாளம் கண்டு தேசிய நிலையில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார்.
இப்போட்டியை மாநில ஆட்சிக் குழுக் உறுப்பினர் அ. சிவநேசன் தொடக்கி வைத்தார். நீதி துறை துணை அமைச்சரும் , ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் வெற்றிப் பெற்ற குழுவினருக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.
பேரா இந்தியர் காற்பத்து சங்கம் ஆண்டு தோறும் சிறப்பான முறையில் இப்போட்டியை நடத்தி் வருவதை பாராட்டினார் எம்.குலா.
அதற்கு உந்துதல் ஏற்படுத்த இப்போட்டிகான செலவிகளை ஈடு செய்ய மாநில அரசாங்கம் கடந்த ஆண்டு 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கியதாகவும் ,இந்த ஆண்டும் 50 ஆயிரம் ரிங்கிட் நிதியை வழங்கியதாக சிவநேசன் கூறினார்.
இந்த ஆண்டு அதிகமான குழுக்கள் கலந்துக் கொண்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகமான குழுக்கள் கலந்துக்கொள்ளவேண்டும்.
அதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் மேலும் மாநில அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவியை பெற்றுத் தர தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்
இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் டத்தோ அமாலுடின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

