68ஆவது மெர்டேக்கா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பிறையில் தேசியக் கொடிகளை பறக்கவிடும் பிரச்சாரம் உற்சாகமாக தொடங்கியது!

பிறை, ஆக 5-
ஆகஸ்ட் 31 ஆம் தேதி நாட்டின் 68 ஆவது மெர்டேக்கா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இப்போது நாடு தழுவிய அளவில் தேசியக் கொடிகளை பறக்கவிடும் உற்சாகம் மேலோங்கி நிற்கிறது.

அந்த வகையில் பிறை Dewan Terbuka SK St. Mark இல் நடைபெற்ற துடிப்பான தேசியக் கொடிகளை பறக்கவிடும் விழாவில் எம்.பி.கே.கே பிறை தலைவர்கள் பங்கேற்றனர்.

தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக, மாணவர்கள் மற்றும் பள்ளி சமூகத்திற்கு 300 தேசியக் கொடிகளை விநியோகித்தோம் என்று பிறை எம்பிகேகே தலைவர் ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கருப்பொருள், ““Malaysia MADANI: Rakyat Disantuni””, சிறு வயதிலிருந்தே தேசத்தின் மீதான அன்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

அன்பான அழைப்பு மற்றும் சிறந்த ஒத்துழைப்புக்கு பள்ளிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து மலேசியர்களுக்கும் மெர்டேக்கா தின வாழ்த்துக்கள் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles