இந்திய சமூகத்தை அவமதிக்கும் வீடியோ தொடர்பில் பூபாலன் போலீஸ் புகார்!

ஜொகூர் பாரு, ஆக 5-
நான் பூபாலன் பொன்னுசாமி, ஜொகூர் மாநில பெர்சத்து துணைத் தலைவர் என்ற முறையில் நேற்று ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு பாசிர் கூடாங், தாமான் சையன்டெக்ஸ் காவல் நிலையத்தில் ஒரு போலீஸ் புகார் பதிவு செய்துள்ளேன் என்றார்.

இந்த நடவடிக்கை, சமூக ஊடகத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் மற்ற இனத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், இந்திய நபரை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதைத் தொடர்ந்து இந்தப் புகாரை செய்துள்ளேன்.

அந்த வீடியோவில், நறுக்கிய எலும்புகளும் சாதமும் கலந்த உணவுகள் அந்த இந்திய நபருக்கும், ஒரு நாயுக்கும் கொடுக்கப்படுவது காட்டப்படுகிறது.

இது, மனித மரியாதையையும், இந்திய சமுதாயத்தின் பெருமையையும் அவமதிக்கும் செயற்பாடாகக் கருதப்படுகிறது.

இது மாதிரியான வீடியோக்கள் நமது பன்முக சமூக ஒற்றுமையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நான் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

அத்துடன், நமது மக்கள் அனைவரும் இவ்வாறான ஒற்றுமையை சீர்குலைக்கும் வீடியோக்களை பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய நாடு ஒரு சமாதானமும் ஒற்றுமையும் கொண்ட நாடாக தொடர எல்லோரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles