
கோலாலம்பூர், ஆக.6-
திங்கள் சந்திப்புக் கூட்டம். ஒவ்வொரு திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்படும் ஒரு வாராந்திர சமூக வர்த்தக நிகழ்ச்சியாகும்.
இந்த வாரத்தில் மாரடைப்புக்குச் செய்யக்கூடிய சிகிச்சை முறைகள் குறித்து டாமான்சாரா நிபுணத்துவ மருத்துவமனையைச் சேர்ந்த இதய மயக்க மருந்து ஆலோசக நிபுணரான டத்தோ டாக்டர் வ.கதிரேசன் அவர்கள் பேசவிருக்கிறார்.
இதில்
• அறுவைச் சிகிச்சையில்லாமல் இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை
நீக்கும் வழிமுறைகள்
• இரத்தக் குழாய்ச் சீரமைப்பு
• இருதய இரத்தக் குழாய் பைபாஸ் ஒட்டு அறுவை சிகிச்சை
ஆகியவை உட்பட மாரடைப்புக்குச் செய்யக்கூடிய சிகிச்சை முறைகள் தொடர்பான விவரங்களை டத்தோ டாக்டர் கதிரேசன் வழங்கவிருக்கிறார்.
ஆகையால், இந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு திங்கட்கிழமை (11ஆம் தேதி) இரவு 7.45 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும்.
இலவச சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மாரடைப்புக்குச் செய்யக்கூடிய சிகிச்சை முறைகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.
ZOOM ID: 878 2811 0295
PASSCODE: 12345
இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 0123025643, 0163679638 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.

