
கோலாலம்பூர் ஆக 7-
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக சிலம்பம் விளங்குகிறது.
இந்த பாரம்பரிய தற்காப்பு கலையை இன்று பல்லீன மக்களும் கற்று வருகின்றனர்.
மலேசிய விளையாட்டு போட்டி எனப்படும் சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடி போட்டிகள் இடம் பெற்றபோது இந்திய சமுதாயம் பெரும் மகிழ்ச்சியை அடைந்தது.
பல ஆண்டுகளாக சுக்மாவில் இடம் பெறாமல் போனபோது சமுதாயம் மற்றும் மலேசிய சிலம்ப கழகம் போராடி வெற்றி பெற்றது.
இளைஞர் விளையாட்டு துறை அமைச்சராக ஹன்னா இயோ மற்றும் மனிதவள அமைச்சராக சிவகுமார் இருந்த காலத்தில் 2024 சுக்மா போட்டியில் சிலம்பம் மீண்டும் இடம் பெற்றது.
14 மாநிலங்களை சேர்ந்த விளையாட்டாளர் கள் சுக்மா சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர்.
ஆனால் 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெறாமல் கழற்றி விட்டது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே சுக்மா போட்டியில் சிலம்பம் மீண்டும் இடம் பெற இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம் மற்றும் சுக்மா போட்டி உயர் கவுன்சில் குழு பரிீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

