சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நிலைநிறுத்த பரிந்துரை! பாப்பா ராயுடு அறிவிப்பு

ஷா ஆலம் ஆக 8-
இந்திய சமூகத்தினருக்கும், தற்காப்புக் கலை ஆர்வலர்களுக்கும், கலாச்சார ஆர்வலர்களுக்கும் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை சுக்மா போட்டியில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் சமர்ப்பித்தேன் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.

இன்று மாலை, சிலாங்கூர் மாநில அட்சிக்குழு கூட்டத்தில் பலரின் கவலை, விவாதம் மற்றும் கோபத்தை ஏற்படுத்திய சிலம்ப விவகாரம் பிரச்சினையை நான் எழுப்பினேன்.

அதாவது மலேசிய விளையாட்டு போட்டி எனப்படும் சுக்மாவில் சிலம்பம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக
சிலங்கூர் 2026 இல் சிலம்பம் விளையாட்டு இடம் பெற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

நான் முழு நம்பிக்கையுடன் வலியுறுத்தினேன்.

பழமை வாய்ந்த தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பத்தை ஒருபோதும்
ஒதுக்க முடியாது!

இது ஒரு தற்காப்புக் கலை மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் வேரூன்றிய இந்திய சமூகத்தின் கண்ணியம்,
வரலாறு மற்றும் அடையாளத்தின் சின்னமாகும்.

ஆகஸ்ட் 2024 இல் சரவாக் சுக்மா போட்டியில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ இந்த விளையாட்டு பதக்க விளையாட்டாக பட்டியலிடப்படும் என்று கூறியதன் அடிப்படையில் எனது கோரிக்கையை ஆணித்தரமாக முன் வைத்தேன்.

சிலம்பம் என்பது நமது முன்னோர்களின் பாரம்பரியம், இது தைரியம், ஒழுக்கம், சுறுசுறுப்பு மற்றும் தோல்வியே தெரியாத போராட்ட மனப்பான்மையைக் கற்பிக்கிறது.

இளைய தலைமுறையினருக்கு, சிலம்பம் என்பது வெறும் உடல் பயிற்சி மட்டுமல்ல. இது குணநலக் கல்வி, மன உறுதி, பொறுமை மற்றும் ஒருவரின் சொந்த கலாச்சாரத்தின் மீதான மரியாதை ஆகியவற்றை உருவாக்குகிறது என்று எடுத்து கூறினேன்.

இந்த நவீன உலகில், சிலம்பம் நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் கோட்டையாகும்.

சிலம்பம், முவா தாய் மற்றும் பெ தாங் விளையாட்டுகள் தொடர்ந்து போட்டியிடப்படுவதையும், சுக்மா 2026 இல் நிகழ்வுகளாக அங்கீகரிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டிற்காக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரிக்கு எனது மிகுந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலாங்கூர் மாநில விளையாட்டு பிரிவு ஆட்சிக் குழு உறுப்பினர் நஜ்வானுக்கும் இந்த தருணத்தில் நன்றி.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவின் பரிந்துரை நடைமுறைக்கு கொண்டு வர டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ முயற்சி எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இரு தினங்களாக நீடித்த இந்த பிரச்சினைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில மனித வளங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக் குழு உறுப்பினர்,
பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles