
கோலாலம்பூர் ஆக 9-
மித்ரா சினார் சஹாயா உதவி திட்டத்தின் கீழ் கஷ்டப்படும் மக்களுக்கு தலா 1,500 வெள்ளி வழங்கப்படுகிறது என்று மித்ரா தலைவர் மாண்புமிகு பிரபாகரன் தெரிவித்தார்.
கஷ்டப்படும் மற்றும் பேறு குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் சினார் சஹாயா உதவி நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இதுவரை 700 பேர் பேர் பதிந்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவ மித்ரா பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது.
மாதம் 500 வெள்ளி வீதம் மூன்று மாதங்களுக்கு 1,500 வெள்ளி வழங்கப்படும்.
இன்று ஸ்தாப்பாக், செலாயாங் இந்தான் பைடூரி, பத்து மூடா, ஜாலான் கூச்சிங் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழு குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய நேரடியாக களம் இறங்கி இருப்பதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் தெரிவித்தார்.

