எங்கள் வேலையை நாங்கள் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறோம்! மித்ரா தலைவர் பிரபாகரன் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஆக 10-
மித்ரா பொறுப்பில் உள்ள நாங்கள் எங்கள் கடமையை முறையாக செய்து வருகிறோம்.

குற்றம் சொல்லி கொண்டிருப்பவர்கள் எங்களை பார்த்தது இல்லை.

என் மீது நம்பிக்கை வைத்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மித்ரா தலைவர் பொறுப்பை ஒப்படைத்தார்.

ஊழல் இல்லாமல் மித்ரா நிதி வெளிப்படையாக வழங்கப்பட்டு வருகிறது.

மித்ரா மீது குறிப்பாக சொந்த கட்சிக்காரர்கள் குற்றச் சாட்டுகளை முன் வைத்தாலும் நாங்கள் எங்கள் கடமையை முறையாக செய்து வருகிறோம்.

வெளிப்படையாக அதுவும் ஒளிவு மறைவு இல்லாமல் மித்ரா இயங்கி வருகிறது.

மிக விரைவில் நல்ல செய்தி வரும் என்று இன்று ஆறு குடும்பங்களுக்கு மித்ரா மூலம் சினார் சஹாயா நிதியுதவி வழங்கிய பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles