மலேசியர்களாய் மேன்மை கொள்வோம் – சிவகுமார்!!

பத்துகாஜா,ஆக12: பல்லினம் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வோடும் வாழும் மலேசியாவில் சுதந்திர உணர்வோம்,தேசபற்றோடும் நாம் அனைவரும் மலேசியர்களாய் மேன்மை கொண்டு வாழ்வோம் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் வலியுறுத்தினார்.

சுதந்திர மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் கடைகளிலும் மட்டுமின்றி ஒவ்வொரு கட்டடத்திலும் நமது பெருமைமிகு அடையாளமான “ஜாலூர் கெமிலாங்கை” பறக்க விட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

தனது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய கொடியை விநியோகம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சிவகுமார் இதனைத் தெரிவித்தார்.

நம்மிடையே அரசியல் ரீதியில் கருத்துவேறுபாடு இருக்கலாம்,வெவ்வேறு மதமாய் இருக்கலாம்,வெவ்வேறு இனமாய் இருக்கலாம்,வெவ்வேறு மொழி பேசுபவர்களாய் நாம் இருக்கலாம்.ஆனால்,நாம் அனைவரும் மலேசியர்கள் என்னும் பெருமிதத்திற்கு சொந்தக்காரர்கள் என்பதை ஒவ்வொரு மலேசியரும் உணர்ந்து மகிழ வேண்டும் எனவும் நினைவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles