

பேரா சித்தியவானில் உள்ள ஸ்ரீ கம்போங் ஆச்சேயில் உள்ள ஸ்ரீ சண்முகர் ஆலயத்தில் கல்வி யாகம் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது.
பேரா மாநில அமால் மக்மூர் சமுக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ சண்முகர் நாதர் ஆலய பொறுப்பாளர்களின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரும் திரளான மாணவர் கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
மாணவர்கள் யாகத்தில் பங்கேற்கும் முன்பு பால. குடங்கள் ஏந்து பால் காணிக்கை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது்
அமால் மக்மூர இயக்கத்தின் செயலார் க. நாச்சிமுத்து முன்னிலையில் நடைபெற்ற இதில். ஆலயத் தலைவர் டத்தோ வ். இளங்கோ சிறப்பு அழைப்பினராக. கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் மேலும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த தன்முனைப்பு பேச்சாளர் வழக்கறிஞர் லோகையா துளசி ராமன் , பேரா மாநில முத்தமிழ் பாவளர் மன்றத் தலைவர் அருள் ஆறுமுகம் கண்ணனும் வருகை அளித்து உரையாற்றினார்.

ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்குப் பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற யாகத்தில பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கபட்டது.
அத்துடன் கடந்த ஆண்டு எஸ். டி.பி. எம் , எஸ். பி. எம். தேர்வில் சிறந்த மதிப்பெண பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கியதுடன் , சிறந்த பெற்றோர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்கள் கௌரவிக்கபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரா மாநில அமால் மக்மோர் சமுக நல இயக்கம் இம்மாநிலம் முழுவதிலும் பல சேவைகளை ஆற்றி வருகிறது.
இந்த ஆண்டு சித்தியவான் , ஸ்ரீ கம்போங் ஆச்சேயில் உள்ள ஸ்ரீ சண்முகர் ஆலயத்தில் மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் ஊக்கப்படுத்தவும் இந்ந கல்வி யாகத்தை ஏற்பாடு செய்ததாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான க. நாச்சிமுத்து கூறினார்.
மாணவர்கள் எதிர் காலத்தில். சிறந்த விளங்க வழிபாடு முக்கியம் , அதன் பின்ன் ஒழுக்கம் உள்ளவர்களாக வாழ வாய்ப்பு உருவாக்குகிறது இதன் வழி சிறந்த கல்விமான்களாக உருவாக வாய்ப்பையும் ஏற்படுதும் என்று
நாச்சி முத்து கூறினார்.
இங்கு இந்த நிகழ்வு சிறப்புடன் நடத்த ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றியைக் கூறிக்கொண்டார்.

