
பீடோர்,ஆக15: விபத்தினால் தன் கல்வியை தொடர்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ள மாணவர் ஒருவருக்கு மருத்துவ நிதியுதவி வழங்கிய சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் மற்றொரு மாணவருக்கு மடிக்கணினியும் வழங்கினார்.
சாலையில் மாடு ஒன்றை மோதி விபத்துக்குள்ளான 18 வயது இளைஞரின் காலில் தகடு வைக்க வெ.3850 தேவைப்பட்ட நிலையில் அதில் ஒரு பகுதியான வெ.1925ஐ சிவநேசன் வழங்கினார்.
அதேவளையில் தனித்து வாழும் தாய் ஒருவர் தன் மகனின் கல்விக்காக மடிக்கணினி கோரியிருந்த நிலையில் அதனையும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான சிவநேசன் வழங்கினார்.
தனித்து வாழும் மாதுவின் மகன் திருநாவுகரசு சமையல் கலையில் டிப்ளோமா பயில்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான மாணவர் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தன் கல்வியை தொடர கேட்டு கொண்ட சிவநேசன் சமையல் கலையில் தன் கல்வியை தொடர்ந்திருக்கும் மாணவர் தன் எதிர்காலத்தை அத்துறையில் மேலும் உயர்த்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இவ்விரு மாணவர்களும் தொழில்த்திறன் சார்ந்து தங்களின் கல்வியை தேர்வு செய்திருப்பது விவேகமானது எனவும் அவர் மேலும் கூறினார்.
மேலும்,உதவிக்கோரிய உடனேயே எங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு கல்வி சார்ந்த விடயத்தின் மாண்புமிகு சிவநேசனின் அக்கறையும் சேவையும் தனித்துவமானது என அவ்விரு அன்னையர்களும் தெரிவித்தனர்.
அவ்விருவரும் மாண்புமிகு சிவநேசனுக்குத் தங்களின் நன்றியையும் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

