பத்து காஜா பெம்பான் நிலத்திட்டத்தில் குடியேற 150 இந்திய குடும்பங்களுக்கு வாய்ப்பு! ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசனின் அற்புத சாதனை

40 ஆண்டுகளாக இழுப்பறியில் இருந்து வந்த பத்து காஜா பெம்பான் குடியேற்ற நிலப்பிரச்சினைக்கு நேற்று தீர்வு பிறந்தது.

புந்தோங் வட்டாரத்தில் புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வந்த 150 இந்திய குடும்பங்கள் முதல் கட்டமாக பெம்பான் நிலத்திட்டத்தில் குடியேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசனின் முயற்சியால் நேற்று 150 இந்திய குடும்பங்களுக்கு லோட் வழங்கப்பட்டது.

இன்னும் எஞ்சியுள்ள 400 குடும்பங்களுக்கு இதே இடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலத்தில் வீடுகள் அல்லது நிலம் வழங்கப்படுவது தொடர்பில் பேராக் மாநில வீடமைப்பு ஊராட்சித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் சந்திரா இங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வழக்கறிஞர் சிவநேசன் தெரிவித்தார்.

இதனிடையே பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி ஏற்று குறுகிய காலத்தில் 150 இந்திய குடும்பங்களுக்கு லோட் பெற்றுத் தந்த வழக்கறிஞர் சிவநேசனுக்கு சம்பந்தப்பட்ட மக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles