தமிழர்கள் என்றால்
இளக்காரமா?
கல்வி அமைச்சரை சாடும் அமைப்புக்கள்

தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தில், தமிழ்ப்பள்ளிகளின் விவகாரத்தைக் கவனித்துக் கொள்ள தமிழர் நியமிக்கப்படாதது நாடு முழுவதும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்குக் கூட தமிழ்ப்பள்ளி பக்கம் ஒதுங்காதவர்களை நியமித்திருப்பது, தமிழ்ப்பள்ளிகளை மரண பாதாளத்துக்குள் தள்ளுவதற்கு ஒப்பான செயல் என்று மலேசிய தமிழர் குரல் அமைப்பாளர் டேவிட் மார்ஷல், மலேசிய தமிழர் வேலன் படைத் தேசிய தலைவர் சுரேந்திரன் பலராமன், பேராக் மாநில தமிழர் வேலன் படைத் தலைவர் தினகரன் கோவிந்தசாமி,மீரா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஆர் சந்திரகுமணன் ஆகியோர் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

இந்நாட்டில் சீக்கியர்களின் பிள்ளைகள் யாரும் தமிழ்ப்பள்ளிகளில் பயில்வதாக தெரியவில்லை..

இந்நிலையில் அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரைத் தமிழ்ப்பள்ளிகளின் அதிகாரியாக நியமித்திருப்பது பொறுத்தமற்ற செயல்.

ஆகவே பொறுத்தமான ஒரு தமிழரை நியமிக்க வேண்டும். மேலும் இந்த விவாகரத்தில்
தமிழர்களை இளக்காரமாக பார்க்க வேண்டாம்.

நிபோங் திபால் நாடாளுமன்ற தொகுதியில் உங்கள் வெற்றிக்கு கைகொடுத்தார்கள் தமிழர்கள் என்பதை மறந்து விட வேண்டாம் என்று அவர்கள் கல்வி அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles