அமெரிக்காவில் 12 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு!

12 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அமெரிக்கா வாஷிங்டன் மேரிலேண்ட் மேரியேட் நட்சத்திர ஹோட்டலில் மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது என்று இதன் ஏற்பாட்டுக் குழு தலைவர் டாக்டர் பி ஆர் எஸ் சம்பத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 11-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு கோலாலம்பூர் கே.எல். மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடைபெற்றது.

இம்முறை 12 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அமெரிக்காவில் நடைபெறுவதால் வாஷிங்டன் மற்றும் மேரிலேண்ட் மேயர்கள் கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத், இதன் தொடர்பில் இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்திய நடுவணரசின் சமூகநலத் துறை முன்னாள் அமைச்சரும் பிரபல நடிகருமானன நெப்போலியன் இந்த மாநாட்டின் இணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு – தேடிய செல்வத்தை வளர்ச்சிப் பணியில் போடு என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்காவில் இருந்து 500 பேராளர்கள்வரை கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மலேசியா, தமிழ் நாடு, இலங்கை, சிங்கப்பூர், மொரீஷியஸ், ஐக்கிய அரபு சிற்றரசு உட்பட உலகம் முழுவதிலும் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் இந்த மாநாடு முதல் முறையாக நடைபெறுவதால் பெரும் உச்சத்தை தொடும் என்று சம்பத் சொன்னார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுகாகும் அழைப்பு விடுத்துள்ளோம்.

இது தவிர்த்து தமிழ் நாடு அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதிமுக, பாரதிய ஜனதா உட்பட பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இதில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் சட்ட கதிர் இதழின் ஆசிரியருமான வி ஆர் எஸ் சம்பத்துடன் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ ஆர் மாரிமுத்து, மாதா கல்வி நிறுவன குழும தலைவர் டாக்டர் எஸ் பீட்டர், மலேசிய தொழில் அதிபரும் சமூக ஆர்வலருமான முபாரக் அலி ஆகியோரும் இன்றைய செய்தியாளர்கா கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles