

ஷா ஆலம் ஆக 20-
ஷா ஆலம் புக்கிட் கெமுனிங்கில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் மகா காளியம்மன் ஆலயத்தின் 55 ஆம் திருவிழா வரும் ஆகஸ்ட் 24 ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
காலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் பால்குடம் காவடிகள் ஏந்தி தீமதியில் இறங்கி அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள்.
அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெறும்.
பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்படும்.
சக்தி வாய்ந்த மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

