தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை விலாயா ம இகாவும் நிறைவேற்றியது!

கோலாலம்பூர் ஆக 24-
தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை விலாயா மாநில ம இகாவும் நிறைவேற்றி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை பல மாநிலங்கள் எடுத்து வரும் நிலையில் விலாயா மாநில ம இகாவும் முடிவு எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டத்தோ ராஜா சைமன் தலைமையில் நேற்று கம்போங் பண்டான் டிராகான் உணவக மண்டபத்தில் விலாயா மாநில ம இகா மாநாட்டை தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் நான்கு தீர்மானங்களில் முக்கிய தீர்மானமாக இது அமைந்துள்ளது.

ம இகா வின் எதிர் காலத்தை முடிவு செய்யும் அதிகாரத்தை ம இகா தலைமைத்துவத்திடம் விட்டு விடுகிறோம் என்று டத்தோ ராஜா சைமன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த மாநாட்டில் உரையாற்றிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம இகா கிளைத் தலைவர்களுக்கு பல கோரிக்கைகளை முன் வைத்தார்.

நாட்டில் உள்ள ம இகா கிளைகளை மூடுவது எங்கள் நோக்கம் அல்ல. கிளைகளை சீர்ப் படுத்துவதே நோக்கம் என்ார்.

இந்த நாட்டில் ம இகா தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சீர்த்திருத்தம் செய்து வருகிறோம்.

நான் இருக்கிறேன் இல்லையோ, டத்தோஸ்ரீ சரவணன் இருக்கிறாரோ இல்லையா, ஆனால் ம இகா இருக்க வேண்டும்.

உண்யையான உறுப்பினர்கள் இருக்கக்கூடிய கட்சியாக ம இகா இருக்க வேண்டும்.

மூத்த உறுப்பினர்களை நாங்கள் போக சொல்லவில்லை.
மூத்த தலைவர்கள் இளையோருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ அஜோசன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன், செயலாளர் டத்தோ ஆனந்தன், பொருளாளர் டத்தோ கண்ணா சிவகுமார், இளைஞர் அணி தலைவர் அர்விந்த், மகளிர் அணி தலைவி சரஸ்வதி நல்லதம்பி உட்பட பலரும் இந்த மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles