உண்மையான உறுப்பினர்கள் இருக்கக்கூடிய கட்சியாக ம இகா விளங்க வேண்டும்! டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு

கோலாலம்பூர் ஆக 24-
நாட்டில் உள்ள ம இகா கிளைகளை மூடுவது எங்கள் நோக்கம் அல்ல. கிளைகளை சீர்ப் படுத்துவதே நோக்கம் என்று ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

இந்த நாட்டில் ம இகா தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சீர்த்திருத்தம் செய்து வருகிறோம்.

நான் இருக்கிறேன் இல்லையோ, டத்தோஸ்ரீ சரவணன் இருக்கிறாரோ இல்லையா, ஆனால் ம இகா இருக்க வேண்டும்.

உண்யையான உறுப்பினர்கள் இருக்கக்கூடிய கட்சியாக ம இகா இருக்க வேண்டும்.

மூத்த உறுப்பினர்களை நாங்கள் போக சொல்லவில்லை.
மூத்த தலைவர்கள் இளையோருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

விலாயா மாநில ம இகா 79 ஆவது பேராளர் மாநாடு மாநில தலைவர் டத்தோ சைமன் முன்னிலையில் கம்போங் பண்டான் டிராகான் உணவக மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ அஜோசன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன், செயலாளர் டத்தோ ஆனந்தன், பொருளாளர் டத்தோ கண்ணா சிவகுமார், இளைஞர் அணி தலைவர் அர்விந்த், மகளிர் அணி தலைவி சரஸ்வதி நல்லதம்பி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles