ம இகாவை கண்டபடி திட்டியவர்கள் இன்று வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள்! டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கடும் சாடல்

சாவ்ஜானா புத்ரா ஆக 24-
அன்று ம இகாவை கண்டபடி திட்டியவர்கள். ஆனால் இன்று வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள் என்று
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மிக கடுமையாக
சாடினார்.

கடந்த 50 ஆண்டுகளாக ம இகாவை பற்றி கண்டப்படி திட்டினார்கள்.

காலையில் எழுந்தவுடன் எதிர் கட்சியில் இருந்த பல இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டிக் கொண்டே இருந்தார்கள்.

காலையில் திட்டுவார்கள் பின்னர் மாலையிலும் திட்டுவார்கள்.
நல்ல திண்ணுட்டு தூங்க போய் விடுவார்கள்.

மறுநாள் காலையில் ம இகா திட்டுவதை தொடங்கி விடுவார்கள்.

இன்று அரசாங்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வாயை திறப்பதில்லை .

ஆனால் ம இகா அப்படி இல்லை.
இந்திய சமுதாயத்திற்காக இன்னமும் போராடி கொண்டிருக்கும் கட்சி என்று அவர் சொன்னார்.

இன்று அரசாங்கத்தில் எந்தவொரு பதவியும் எங்களுக்கு இல்லை.

ஆனால் ம இகா இன்னமும் இந்திய சமுதாயத்தின் மீது அக்கறை மற்றும் பாசம் கொண்டு சேவையாற்றி வருகிறது.

கோலாலம்பூர் அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலில் உருவான ஒரு கட்சி ம இகா என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

இந்திய சமுதாயத்தை சேர்ந்த உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்னமும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் உபகாரம் சம்பளம் வழங்கி வருகிறது என்றார் அவர்.

சாவ்ஜானா புத்ரா Mahsa university மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில மஇகா மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles