
தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் ஓர் தமிழர் இடம் பெறாமல் போன விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.
இது பரிவூமிக்க மக்கள் அரசு என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.
இந்த பரிவுமிக்க மக்கள் அரசாங்கத்தில் எந்தவொரு இனமும் புறக்கணிக்கப்படாது என்று வாக்குறுதி வழங்கி இருக்கிறார்.
ஆகவே தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் ஓர் தமிழர் இடம் பெறாமல் போனது பெருத்த ஏமாற்றமாகும்.
உலகில் மூத்த மொழிகளில் ஒன்றாக தமிழ் விளங்குகிறது.
தமிழுக்கு ஒரு சோதனை என்றால் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொதித்து எழுவார்கள்.
ஆகவே இந்த விவகாரத்தில் நல்ல முடிவை காண கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

