
உணவகங்கள், கட்டுமானம், தோட்டம், விவசாயம், தொழிற்சாலைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்படுகிறார்கள் என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்தார்.
இந்த ஐந்து துறைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்க உள்துறை அமைச்சும் மனித வள அமைச்சும் கூட்டாக இணைந்து தொழிலாளர்களை தருவிக்க முடிவு செய்துள்ளது.
இன்னும் மூன்று மாதங்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்ப்படும் என்று பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு அன்பளிப்புகளையும் அவர் வழங்கினார்.

