தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் தமிழர் நியமனம்!
கல்வி அமைச்சருடன்
மனித வள அமைச்சர் புதன் கிழமை சந்திப்பு!

தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் ஓர் தமிழர் இடம் பெறாமல் போன விவகாரம் நாட்டில் சமுதாயத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உணர்ச்சிமிக்க விவகாரம் தொடர்பில் வரும் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்கை மனித வள அமைச்சர் வி சிவகுமார் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்

இந்த சந்திப்பின் மூலம் இந்த பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்

தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் தமிழ்ப் பள்ளிகள் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு ஒரு தமிழ் கல்வியறிவு பெற்றவர் கண்டிப்பாக தேவை என்பதை சமுதாயம் உணர்கிறது.

இந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஓர் தமிழர் இந்த ஆலோசனை குழுவில் இடம் பெறுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles