
நாளை ஆகஸ்ட் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் வேளையில் மலேசிய திருநாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கலை கட்டியுள்ளது.
மலேசியாவில் வாழும் இந்து பெருமக்கள் தங்கள் இல்லங்கள் தோறும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராகி விட்டனர்
அந்த வகையில் மலேசியாவில் புகழ்பெற்ற கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவுடன் தங்க ரத ஊர்வலம் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பூசைகளுக்கு பின்னர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா – புவான் ஸ்ரீ மல்லிகா நடராஜா தம்பதியர் கொடியை தங்க ரதம் ஊர்வலத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.
தங்க ரதம் பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு பெட்டாலிங் ல்திரிட் மற்றும் மகா மாரியம்மன் கோவிலை வலம் வந்து பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தை வந்தடையும்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா முழுவதும் வலம் வந்து பின்னர் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் வந்தடையும்.
அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழா கலை கட்ட தொடங்கி விடும்.
இன்னும் நாளையும்
கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது என்று டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.

