


கோலாலம்பூர் ஆக 27-
இன்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் கோலாலம்பூர் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா களைக்கட்டி இருக்கிறது.
நேற்று இரவு 7.00 மணிக்கு தங்கரத ஊர்வலத்தை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட தங்கரதம் பெட்டாலிங் ஸ்திரிட், ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வலம் வந்து இன்று காலை 2.00 மணிக்கு கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலை வந்து அடைந்தது.
அதனைத் தொடர்ந்து காலையில் கோர்ட்டு மலை பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிவஸ்ரீ சிவனாந்தா குருக்கள் சிறப்பு பூஜையை நடத்தி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து விநாயகர் பெருமானை தரிசிக்க பக்தர்கள் நீண்ட தூரம் காத்திருந்து வழிபட்டனர்.
ஃபோர்ட் கிள்ளான் வட்டார வர்த்தக பிரமுகர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் வழக்கம் போல் பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் வழங்கினார்.
மேலும் பொதுமக்கள் பலரும் பந்தல் அமைத்து பக்தர்கள் தாக்கம் தீர்க்க கனிம நீர் மற்றும் உணவுகளை வழங்கினர்.

