

மா.பவளச்செல்வம்
கோலாலம்பூர் ஆக 27-
நாட்டின் 68 ஆவது மெர்டேக்கா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மலேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நேற்று பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வட்டார மக்களுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட்டது.
வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் கொடி வழங்கப்பட்டது.
இந்தியர்களை மையமாகக் கொண்டிருக்கும் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் தேசியக் கொடி வழங்கியதற்கு முக்கிய காரணம் உள்ளது.
அதாவது இந்திய சமுதாயம் அதிக அளவில் தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவது இல்லை. இதனால் அவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என குற்றஞ்சாட்டுகள் எழுகிறது.
இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானதாகும்.
காரணம் இந்நாட்டில் உள்ள இந்திய சமுதாய மக்கள் அதிக நாட்டுப்பற்றை கொண்டவர்களாக உள்ளனர்.
ஆக நம் மக்களை நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என யாரும் கூறக்கூடாது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
நாட்டின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு இந்திய சமுதாய மக்கள் வீடுகள் தோறும் தேசியக் கொடிகளை பறக்கவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இன்று நடைபெற்ற நிகழ்வில் மக்கள் சக்தி கட்சியின் சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ ரமேஷ், ஏற்பாட்டுக் குழு தலைவர் குகேஸ், விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ சைமன் ராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

