

கோலாலம்பூர் ஆக 27-
இன்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஆலயங்களில் விழாக் கோலம் பூண்டுள்ளது.
மலேசியத் திருநாட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் செராஸ் இரண்டரை மைல் தோகையடி விநாயகர் ஆலயத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா களைக்கட்டி உள்ளது.
பிரபல நாடக இயக்குனர் மற்றும் தோகையடி விநாயகர் ஆலயத்தின் தலைவர் தனபாலன் தலைமையில் இன்று காலையில் நடைபெற்ற சிறப்பு பூசையில் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் கலந்து சிறப்பித்தார்.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் தோகையடி விநாயகர் ஆலயத்திற்கு 50,000 வெள்ளி மானியத்தை அவர் வழங்கினார்.
கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் தோகையடி விநாயகர் ஆலயத்திற்கு தலா 20,000 வெள்ளி வழங்கினார்.
2024 ஆம் ஆண்டில் 40,000 வெள்ளி வழங்கினார். இந்த ஆண்டு 50,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
இந்த தருணத்தில் அவருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தனபாலன் தெரிவித்தார்.

