
கோலாலம்பூர் ஆக 28-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் விரைவில் மூன்று மாபெரும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மீபா தேசிய உதவித் தலைவரும் மீபா போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவருமான ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
வரும் அக்டோபர் மாதம் 25,26 ஆம் தேதிகளில் பினாங்கு மாநிலத்தில் 14 வயதுக்கு உட்பட்ட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆண்கள் பிரிவில் 16 குழுக்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 16 குழுக்கள் கலந்து கொள்கிறது.
வரும் நவம்பர் மாதம் 15,16 ஆம் தேதிகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி நடைபெறும்.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து ஆண்கள் பிரிவில் இரண்டு குழுக்களும் பெண்கள் பிரிவில் ஒரு குழுவும் பங்கேற்கும். போட்டிக்கான இடம் வரும் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே மலேசிய இந்திய பெண்களுக்கான கால்பந்து போட்டி வரும் டிசம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாநில இந்திய கால்பந்து சங்கங்கள் & MFCD பதிவுசெய்யப்பட்ட கிளப்புகள் இந்த போட்டிகளுக்கு இப்போதே தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இந்த தருணத்தில் தமிழப்பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டிகளை அந்தந்த மாநிலங்கள் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து முடித்தற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.

