நீர் இல்லாமல் பிபிஆர் கம்போங் முஹிபா குடிவாசிகள் தவிப்பு: டிபிகேஎல் கருணை காட்ட வேண்டும்! -சத்தியா வலியுறுத்து

கோலாலம்பூர், ஆக.28-
பிபிஆர் கம்போங் முஹிபா குடியிருப்பிலுள்ள சில வீடுகளில் டிபிகேஎல் நீர் விநியோகத்தை துண்டித்ததால் மக்கள் இன்னலுக்குள்ளாகியுள்ளதாக பிபிபி கட்சியின் செயலாளர் சத்தியா தெரிவித்தார்.

நீர் சேவைக்கான கட்டனத்தை அங்குள்ள சில மக்கள் முறையாக செலுத்தாததால் இந்த முடிவை டிபிகேஎல் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது டிபிகேஎல் கருணை காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

நீர் துண்டிக்கப்பட்டதால் அந்த குடியிருப்பிலுள்ள அதிகமான தனித்து வாழும் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதுமான மாத வருமானம் இல்லை. அதனால் அவர்களால் முறையாக கட்டணத்தை செலுத்த முடியவில்லை என தன்னிடம் முறையிட்டதாக அவர் சென்னார்.

நீர் சேவை இல்லாததால் அந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளால் பள்ளிக்கு செல்லவில்லை. மேலும் நீர் இல்லாமல் குழந்தைகளுக்கு உணவுகளை தயாரிக்க முடியவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட மக்கள் இன்று டிபிகேஎல் தலைமையகத்தில் கூடினர். அவர்களுக்கு உதவும் பொருட்டு பிபிபி கட்சியினர் அங்கு கூடியிருந்தனர்.

அவர்களின் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து சத்தியா, டத்தோ பண்டாரிடமும் கூட்டரசுப் பிரதேச அமைச்சரிடமும் மகஜரை வழங்கினார். இரு தரப்பின் பிரதிநிதிகள் அந்த மகஜரை பெற்றுக் கொண்டனர்.

முறையான வருமானமின்றி தவிக்கும் இந்த தனித்து வாழும் தாய்மார்களுக்கு சமூக நல உதவிகள் பிரிவின் கீழ் மித்ரா உதவ முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்த மக்கள் நீர் சேவை கட்டணத்தை கட்டவே முடியாது என கூறவில்லை. தவணைக் காலம் கொடுங்கள் கொசஞ்சம் கொஞ்சமாக கட்டுவதாகதான் கூறுகிறார்கள். ஆகையால் அவர்கள் உதவ டிபிகேஎல் முன்வர வேண்டும் என்று சத்தியா வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles