இனதுஷ்பிரயோகம் செய்த மஞ்சோய் சட்டமன்ற உறுப்பினர் மீது சட்ட நவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?

ஈப்போ, செப்.3: பேராக் மாநில தேசிய தின கொண்டாட்டத்தில் பெண்மணி ஒருவர் திடிரென பேராக் சுல்தானை நெருங்கி அசம்பாவிதத்தை உருவாக்கினார். அப்பெண்மணியின் தடுப்புக்காவல் வழக்கு நேற்றுடன்(3.8.2025) முற்றுப்பெற்றது.

இருப்பினும், இவ்விசாரணை இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதால் அப்பெண்மணியை மேலும் மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில துணை போலீஸ்படை தலைவர் டி சி பி முகமட் அஸ்லான சடாரியை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறியதாக பேராக் மாநில ஒற்றுமை, சுகாதாரம், மனிதவளம் மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

அப்பெண்மணியிடம் மேலும் பல விசாரணையை போலீஸ் தரப்பினர் மேற்கொள்ளவுள்ளனர். அதற்கு நேர அவகாசம் தேவை என்பதால் அப்பெண்மணியை மேலும் மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய இது ஏதுவாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இவ்விவகாரத்தில் சிக்கிய பெண்மணி ஒரு சீன பெண்மணி என்று மஞ்சோய் சட்டமன்ற உறுப்பினர் ஹாபிஸ் சப்ரி தமது முகநூலில் பதிவிட்டுள்ளதை பொதுமக்களுக்கும், போலீஸ் தரப்பினருக்கும் நன்கு அறிவார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்களின் ஒற்றுமை காக்க வேண்டும். ஆனால், இவர் இன துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று அவர் சாடினார்.

இவ்விவகாரத்தை போலீஸ் தரப்பினர் கடுமையாக கருதுகின்றனர். ஆகையால், ஆதாரங்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். அத்துடன், போலீஸ் தரப்பினர் இம்முறை முறையாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்டு சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வாய்புண்டு என்று அவர் சொன்னார்.

இந்நாட்டு மக்கள் பல இனத்தவராகும் இருந்தாலும் மக்கள் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், நாட்டை குழப்பி வருபவர்கள் சுயநலகார சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது இச்சம்பவங்கள் ஊர்ஜிதமாகியுள்ளது. அண்மையில் தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டைகளில் அரபிக் மொழியில் எழுதப்பட வேண்டும் என்று தம் கருத்தை பதிவிட்டுள்ளார் என்பதை நாட்டு மக்கள் அறிந்ததே.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles