
சுங்கைபட்டாணிசெப் 4-
சமயத்தை அடிப்படையாக வைத்து ஏமாற்றும் நடவடிக்கையினை மேற்கொள்பவர்கள் மீது மலேசிய இந்து சங்கம் கடும் நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாக மலேசிய இந்து சங்கத்தின் தேசிய உதவித் தலைவர் சங்க ரத்னா ஶ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் கூறினார்.
இங்குள்ள சரஸ்வதி தமிழ்ப்பள்ளியல் நிகழ்ந்து மலேசிய இந்து சங்கத்தின் கெடா மாநில 47ஆவது திருமுறை ஒதும் விழாவினை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.
இன்று நமது சமுதாயத்தில் பல விதமான குளறுபடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மண்டி பூங்கா எனும் பூ குளித்தல் போன்றவைக்கு பணங்களை வசூல் செய்து சில கூட்டங்கள் ஏமாற்றி வருகிறது.
இந்திய சமுதாயத்தில் அதிகமனோர் யார் எதை சொன்னாலும் நம்புவதை வழக்கமாகிக் கொண்டிருகின்றனர்.அதனால்தான் பலர் இங்கு தூண்டி போடுகின்றனர். மற்றவர்கள் சொல்வதை நம்பி மற்ற மததிற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம் நிலைமை இப்படியே சென்றால் ஒரு நாள் நமது மதத்தை இழப்பதற்கு ஆபத்து உள்ளது என்பதை அவர் நினைவூட்டினார். மலேசிய இந்து சங்கம் அசைக்க முடியாத ஓர் சங்கமாகும்.இனியும் இதுபோன்ற நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றார்.
மாணவர்கள் திருமுறையினை போட்டிக்காக மட்டும் ஓதக்கூடாது.தினமும் அதை அதர் பாராயணம் செய்ய வேண்டும். ஆலயங்களில் ஓதவேண்டும்.போட்டி முடிந்துவிட்டது என்று 3மாத்திற்கு திருமுறைக்கு விடுமுறையினை கொடுத்திடக்கடாது. அர்தங்கள் புரிந்து திருமுறையினை சொல்வதுதான் மிகச் சிறப்பாகும் என்றார்.

முன்னதாக பேசிய மலேசிய இந்து சங்கத்தின் கெடா மாநிலத் தலைவர் விவேக ரத்னா எஸ்.பரமசிவம்,ஆலயத்தில் வெறும வ்ழிபாடு மட்டும் இல்லாமல் சமயச் சொற்பொழிவுகள் அவசியம் நிகழவேண்டும் என்றார்.
அதோடு வாரம் ஒருமுறை கூட்டுப்பிரர்த்தனையினை அவசியம் குடும்பத்துடன் ஓதுவது சிறப்பாகும் என்றார்.திருமுறை ஓதினால் ஜாதகங்கள்பார்கத்தேவையில்லை என முன்னோர்கள் சொல்லியிருந்ததாக கூறிய அவர் இதனால் நமது கஷ்டங்கள் தானாக மறியும் என்றார்.
பெரும்பாலும் சமயநெறியோடு இருப்பவர்கள் எங்குச் சென்றாலும் நமது கலாச்சார பாரம்பரிய உடைகளுடன்தான் செல்வதை பார்க்க முடிகிறது.இதற்கு முழு காரணமாகத் திகழ்வது மலேசிய இந்து சங்கம்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கெடா மாநில திருமுறை ஓதுவதில் வெற்றி பெற்ற மாநிலமாகத் திகந்திருந்தது. அதை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என நிகழ்விற்கு வந்திருந்த மாணவர்களை பரமசிவம் கேட்டுக் கொண்டார்.

