

புத்ரா ஜெயா, செப் 4-
அறிவு மிக்க குழந்தை, சிறப்பான நாடு திட்டத்தின் கீழ் தனியார் பாலர் பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவர்களுக்கு மித்ரா ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கி உள்ளது என்று மித்ரா தலைவர் பிரபாகரன் இன்று தெரிவித்தார்.
மலேசிய இந்தியர் உருமாற்றுத் திறன் (MITRA) RM10 மில்லியன் அதாவது ஒரு கோடி வெள்ளி நிதியை, B40 குடும்பத்தைச் சேர்ந்த 5,000 பாலர் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கியுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டிற்கான தனியார் பாலர் பள்ளி ஆரம்பக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த திட்டம், B40 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான தரமான கல்வியை உறுதி செய்யும் வகையில் அரசாங்கத்தின் மலேசியக் கல்வி மேம்பாட்டு திட்டம் (PPPM) 2013-2025-க்கு ஏற்ப செயல்படுத்தப் படுகிறது.
MITRA, தனியார் முன்பள்ளி நிர்வாகிகளிடமிருந்து மொத்தம் 178 விண்ணப்பங்களை பெற்றது.
பரிசீலனைக்கு பின், 173 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதன் மூலம் 4,025 பாலர் பள்ளி குழந்தைகள் நன்மை அடைகின்றனர்,
மொத்த நிதி ஒதுக்கீடு RM7,750,575.00 ஆகும். இந்த உதவித்தொகை, தகுதி வாய்ந்த தனியார் முன்பள்ளிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின் ஒருமுறை (one-off) கட்டணமாக வழங்கப்படும்.
தகவலுக்காக, தகுதியான பாலர் பள்ளி மற்றும் குழந்தைகளின் பெயர் பட்டியலை 2025 செப்டம்பர் 8 முதல் MITRA வலைத்தளத்தில் பார்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, தனியார் பாலர் பள்ளி ஆரம்பக் கல்வி உதவித் தொகை திட்டம் 2025 குறித்து கேள்விகள் இருந்தால், வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை 03-8892 3442 என்ற எண்களில் MITRA-வைத் தொடர்புகொள்ளலாம் அல்லது spl@mitra.gov.my
என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம் என்று அவர் சொன்னார்.
இன்று புத்ரா ஜெயா வில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

